Tuesday, July 15, 2014

ஆப்கானில் குண்டு வெடிப்பு; 89 பேர் மரணம்

கிழக்கு ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தில் சனநடமாட்டம் உள்ள சந்தை ஒன்றில்  இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ள கார் குண்டு வெடிப்பில் குறைந்தபட்சம்  89 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதன்போது, 40 பேர் காயமடைந்துள்ளனர்.

ஒர்கன் மாவட்டத்திலுள்ள சந்தையினுள் வாகனமொன்றை செலுத்திவந்த தாக்குதல்தாரி, வெடிபொருட்களை வெடிக்க வைத்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ள வேளையில் சந்தையில்  சனநடமாட்டம் காணப்பட்டதுடன், மக்கள் கொள்வனவுகளிலும்; ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை எனவும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
Disqus Comments